ஒலிம்பிக், பாராலிம்பிக் வீரர்கள் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.. பிரதமர் மோடி பேச்சு!

கல்வி சமத்துவமாக இருக்க வேண்டும் என்று கல்வித்துறையில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Update: 2021-09-07 12:59 GMT

கல்வி சமத்துவமாக இருக்க வேண்டும் என்று கல்வித்துறையில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர் மோடி, ஆசிரியர்களுடன் காணொலி மூலமாக பேசியதாவது: தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கடினமான சூழலிலும் பணியாற்றிய உங்களின் முயற்சிகள் பாராட்டுக்குரியது.

தற்போது துவங்கப்பட்ட திட்டங்கள் கல்வித்துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும். பள்ளியின் தர மதிப்பீடு மற்றும் உறுதிப்பாடு போட்டித்தன்மையுடன் ஆக்குவது மட்டுமின்றி, மாணவர்களை எதிர்காலத்திற்கு கொண்டு செல்லும்.

மேலும், ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பி வீரர்களிடமும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளேன். ஒவ்வொரு வீரரரும் 75 பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு விளையாட்டு மீது உள்ள ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். அது மட்டுமின்றி பள்ளிகளில் ஒரு மணி நேரம் செலவிட்டு விளையாட்டுக்கு அவர்களை தயார்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவர் பேசும்போது, கல்வி சமத்துவமாக இருக்க வேண்டும் என்றார்.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News