80வது மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார் !

பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றார். அப்போது இருந்து மன் கி பாத் என்ற நிகழ்ச்சி மூலம் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.;

Update: 2021-08-29 02:43 GMT
80வது மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார் !

பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றார். அப்போது இருந்து மன் கி பாத் என்ற நிகழ்ச்சி மூலம் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

அனைத்து தரப்பு மக்களிடமும் நாட்டில் நடைபெறும் நிகழ்வு மற்றும் பொருளாதாரம், அரசியல் உள்ளிட்டவைகளை கலந்துரையாடுவார்.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்கான கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால், இன்று 11 மணிக்கு வானொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இது 80வது நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இன்று கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போட வேண்டும் என்றும், தொற்றில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது பற்றியும் பிரதமர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source,Image Courtesy: Maalaimalar

https://www.maalaimalar.com/news/topnews/2021/08/29040746/2963318/Tamil-News-PM-Modi-to-share-his-thoughts-in-Mann-Ki.vpf

Tags:    

Similar News