நாட்டை கொள்ளை அடித்தவர்கள் சிறையில் உள்ளனர்! பிரதமர் மோடி விளாசல்!

தற்போதுள்ள மத்திய அரசு மக்கள் நலனுக்காக, நாட்டின் வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறது. ஆனால் முந்தைய ஆட்சியில் நாட்டை கொள்ளை அடித்த காரணமாக பலர் சிறையில் உள்ளனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2021-09-14 13:28 GMT

தற்போதுள்ள மத்திய அரசு மக்கள் நலனுக்காக, நாட்டின் வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறது. ஆனால் முந்தைய ஆட்சியில் நாட்டை கொள்ளை அடித்த காரணமாக பலர் சிறையில் உள்ளனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அலிகார் மாவட்டத்தில் மகேந்திர பிதாப் சிங் பெயரில் பல்கலைக்கழகம் துவங்கப்பட உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் 395 கல்லூரிகள் அங்கீகாரம் பெற்று செயல்பட உள்ளது. இப்பலைக்கழகத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.

இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: பாதுகாப்பு துறையில் இறக்குமதியை சார்ந்திருந்த நாடு தற்போது பெரிய அளவில் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது. ஒட்டு மொத்த உலகமும், இந்தியாவில் இருந்து போர்க்கப்பல்கள், ட்ரோன்கள், விமான உதிரிபாகங்கள் மற்றும் நவீன குண்டுகள் உற்பத்தி செய்யப்படுவதை பார்க்கின்றது.

தற்போது பாதுகாப்பு துறை சார்ந்த ஏற்றுமதியில் இந்தியா புதிய அடையாளத்தை நோக்கி முன்னேறுகிறது. ஒரு சமயத்தில் நிர்வாகத்தை குண்டர்கள் கையில் எடுத்திருந்தனர். ஊழல் செய்தவர்களின் கைகளில் ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது. தற்போது அவர்கள் பலர் சிறையில் உள்ளனர். மேலும் உத்தர பிரதேச வளர்ச்சிக்கு மத்திய அரசும், முதலமைச்சர் யோகி அரசும் இணைந்து பணியாற்றி வருகிறது.

தற்போதைய சூழலில் மாநிலத்திற்கு எதிராக செயல்படும் சக்திகளுக்கு எதிராக நாம் செயல்பட வேண்டியுள்ளது. இன்றைய உலகம் நாட்டில் உள்ள சிறிய மற்றும் பெரிய முதலீட்டாளர்களை உபி கவர்ந்துள்ளது. இதற்கான அனைத்து சூழலையும் உபி அரசு உருவாக்கியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Source: Dinamalar

Image Courtesy: ANI


Tags:    

Similar News