கொரோனா பரவல் அதிகரிப்பு: மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.!
இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்த தொற்று தீவிரமாக நாடு முழுவதும் பரவ தொடங்கியதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்த தொற்று தீவிரமாக நாடு முழுவதும் பரவ தொடங்கியதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
கொரோனா தொற்றை ஒழிப்பதற்கு பிரதமர் மோடி தனிக்கவனம் செலுத்தி வருகிறார். அதே போன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்து பல்வேறு அறிவுரைகளை வழங்கி வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் தொற்று குறைந்து காணப்பட்ட நிலையில், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே நாடு முழுவதும் ஒருபுறம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் சில இடங்களில் தொற்று குறையாமல் அப்படியே உள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் சில வாரங்களாக தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதைப்போன்று நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்பட்டது. அதனை தொடர்ந்து 2ம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை தடுப்பூசி போடும் பணியானது 3 கோடியை எட்டிவிட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று (17ம் தேதி) மீண்டும் மாநில முதலமைச்சர்களுடன் கலந்துரையாடல் நடத்த உள்ளார். காணொலி வாயிலாக மாநிலங்களின் கொரோனா நிலவரம் குறித்து கேட்டறிவார் என கூறப்படுகிறது.
இதன் பின்னர் தொற்று பரவலை குறைப்பதற்கான ஆலோசனையும் வழங்குவார் என கூறப்படுகிறது. மேலும், ஊரடங்கை மீண்டும் அமல்படுத்தப்படுமா என்பது இன்று நடைபெறும் கூட்டத்தில் தெரியவரும்.