மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாக இருக்க மஹாளய அமாவாசை தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து!
மஹாளய அமாவாசை இன்று (அக்டோபர் 6) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் அனைவரும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்படுவது வழக்கமாகும்.
மஹாளய அமாவாசை இன்று (அக்டோபர் 6) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் அனைவரும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்படுவது வழக்கமாகும்.
இந்த நாளில் முன்னோர்களை வணங்கி வழிபட்டால் அனைத்தும் நன்மையே உண்டாகும் என்பது ஐதீகமாகும். இதனால் இந்துக்கள் அனைவரும் இன்று கடற்கரை மற்றும் கோயில் முக்கிய குளங்களில் தங்களின் முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றை காரணம் காட்டி திமுக அரசு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை பல்வேறு இடங்களில் தடுத்துள்ளது. இதன் காரணமாக பலர் தங்களின் வீடுகளில் கூட இந்த மஹாளய அமாவாசை பூஜையில் ஈடுபட்டுள்ளதை காணமுடிகிறது.
இந்நிலையில், மஹாளய அமாவாசையை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த நன்னாளில் துர்கா தேவியை வணங்குவதாகவும், அனைத்து குடிமக்களும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Source: PM Modi
Image Courtesy:பிஜேபி,Twiter