மார்ச் 27 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி: ஏன் தெரியுமா?

நரேந்திர மோடி அவர்கள் மார்ச் 27ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைப்பு நிலையத்தை திறந்து வைக்கிறார்.

Update: 2023-03-16 02:13 GMT

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பன்னாட்டு முனையங்களை இணைத்து புதிய நவீன முனையம் அமைக்கும் பணி 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த பணிக்கான அடிக்கல் நாட்டி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். குறிப்பாக இரண்டு 2,467 கோடி மதிப்பீட்டில் சுமார் 2 லட்சத்து 20 ஆயிரத்து 972 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த திட்டமானது கட்டத் திட்டமைக்கப்பட்டு இருந்தது. இந்த பணிகள் இரண்டாம் கட்டங்களாக செய்ய முடிவு செய்யப்பட்டது. நவீன வசதிகள் ஆறு அடுக்கு, மல்டி லெவல் கார் பார்க்கிங் மேலும் புறப்படும் முனையம் ஆகியவை போன்ற பல்வேறு வசதிகளும் இதில் இடம் பெற்று இருக்கிறது.


குறிப்பாக குடியுரிமை சோதனை, சுங்க சோதனை ஆகியவற்றுக்கான விலாசமான கட்டிடங்கள், கூடுதல் கவுண்டர்கள், VVIPகளுக்கான ஓய்விடங்கள், பயணிகள் தங்கும் அறைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. விமான நிலைய முதல் கட்டிட பணி பன்னாட்டு வருகை முடியு 42,300 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த புதிய முனையத்தில் கீழ் பயனாளர்கள் உடமைகள் கையாளப்பட இருக்கிறது. இந்த நிலையில் புதிய முனைகத்தை செயல்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வருகின்ற மார்ச் 27 தேதி சென்னை விமான நிலையத்தில் நடக்கும் விழாவில் கலந்துகொண்டு தொடங்கி வைக்க இருக்கிறார். நரேந்திர மோடி அவர்கள் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக 27ஆம் தேதிக்கு மதுரைக்கு வருகை தருகிறார்.


அதன் பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக ராமேஸ்வரம் சென்று சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். அதன் பிறகு சென்னை விமான நிலையத்தில் நடக்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முறைப்படி தொடங்கு வைத்து புதிய ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையம் கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இன்னும் ஒரு சில தினங்களில் இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. புதிய முனையம் திறப்பு விழாவிற்கு முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News