ரூ.3,650 கோடி மதிப்பிலான திட்டங்கள் - இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

அக்டோபர் 5-ம் தேதி ஹிமாச்சலப் பிரதேசம் செல்லும் பிரதமர் மோடி, ரூ.3,650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

Update: 2022-10-05 03:31 GMT

அக்டோபர் 5-ம் தேதி ஹிமாச்சலப் பிரதேசம் செல்லும் பிரதமர் மோடி, ரூ.3,650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார், தசரா கொண்டாட்டங்களில் பங்கேற்கிறார். பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை அக்டோபர் 5 இமாச்சலப் பிரதேசத்திற்குச் சென்று ரூ.3,650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். பிரதமர் காலை 11:30 மணியளவில் எய்ம்ஸ் பிலாஸ்பூரில் மோடி திறந்து வைப்பார். அதைத் தொடர்ந்து பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் என்று பிரதமர் அலுவலகத்திலிருந்து செய்தி வெளியாகி இருக்கிறது.


மேலும் பிலாஸ்பூரில் உள்ள லுஹ்னு மைதானத்தில் ஒரு பொது விழாவில் உரையாற்றுவார். பின்னர் பிற்பகல் 3:15 மணியளவில் குலுவின் தால்பூர் மைதானத்தை சென்றடையும் பிரதமர், தசரா கொண்டாட்டங்களில் பங்கேற்பார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கிருக்கும் தசரா கொண்டாட்டங்களில் இது முதல்முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இமாச்சலப் பிரதேசத்தில், NH-105 இல் பிஞ்சோரிலிருந்து நலகர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை 1,690 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு வழிச்சாலைக்கான சுமார் 31 கிமீ நீள திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.


அம்பாலா, சண்டிகர், பஞ்ச்குலா மற்றும் சிம்லா ஆகிய இடங்களிலிருந்து பிலாஸ்பூர், மண்டி மற்றும் மணாலி நோக்கிச் செல்லும் போக்குவரத்தை இணைக்கும் முக்கிய இணைப்பாக இந்த திட்ட சாலை உள்ளது. இந்த நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 18 கிமீ நீளம் இமாச்சலப் பிரதேசத்தின் கீழ் வருகிறது. 350 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள நலகரில் மருத்துவ சாதன பூங்காவிற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார்.

Input & Image courtesy: Zee News

Tags:    

Similar News