உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துக்கள்: பிரதமர் மோடி பொங்கல் மடல்!

Update: 2022-01-14 05:04 GMT
உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துக்கள்: பிரதமர் மோடி பொங்கல் மடல்!

தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாள் இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து இன்று தங்களின் வீடுகள் முன்பாக புது பானையில் பொங்கல் வைத்து சூரியனை வழிப்பட்டு வருகின்றனர். இந்த சிறப்பு மிக்க நாளில் இந்திய பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழத்து மடலை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் திகழ்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த நாளன்று அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். இயற்கையுடனான நமது பிணைப்பும் நமது சமூகத்தின் சகோதரத்துவ உணர்வும் இன்னும் ஆழமாவதற்கு நான பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் தனது வாழ்த்து மடலில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Twiter

Image Courtesy: The Statesman

Tags:    

Similar News