3 ஆண்டுகளில் 7 கோடி கிராம குடும்பங்களுக்கு தூய குடிநீர் வசதி - பிரதமரின் மகத்தான முயற்சி!

ஜல் ஜீவன் மிஷன் 7 கோடி கிராமப்புற குடும்பங்கள் 3 ஆண்டுகளில் குழாய் நீர் வசதியுடன் இணைக்கப் பட்டுள்ளன பிரதமர் பெருமிதம்

Update: 2022-08-20 00:11 GMT

ஜல் ஜீவன் மிஷன் மற்றும் ஸ்வச் பாரத் அபியான் தொடர்பான 3 முக்கிய மைல்கற்களை இந்தியா கடந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். நீர் பாதுகாப்பு பிரச்சினைகளை கையாள்வதில் அரசின் கவனம் குறித்தும் அவர் உரையாற்றினார். ஜல் ஜீவன் மிஷன் மூலமாக 7 கோடி கிராமப்புற குடும்பங்கள் 3 ஆண்டுகளில் குழாய் நீர் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. ஜல்ஷக்தி மிஷன் மூலமாக வெறும் மூன்று ஆண்டுகளில் 7 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு தூய்மையான குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சாதாரண சாதனை அல்ல. 


நம் சுதந்திரம் அடைந்து 70ஆண்டுகள் ஆன பிறகு, மூவரும் மூன்று ஆண்டுகளில் 7 கோடி குடும்பங்கள் தற்போது தான் தூய்மையான குடிநீரை இந்த திட்டத்தின் மூலம் பெற்று உள்ளார்கள் என்பதும் பிரதமர் அவர்களின் மகத்தான முயற்சியைக் காட்டுகிறது. இதுகுறித்து பிரதமர் அவர்களே, கோவாவின் பனாஜியில் நடைபெற்ற 'ஹர் கர் ஜல் உத்சவ்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மெய்நிகர் உரை நிகழ்த்தினார். ஜல் ஜீவன் திட்டத்தின் வெற்றியில் மத்திய அரசின் பணிகளை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, கோடி கோடி கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீர் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஏழு கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


மூன்றாவது சாதனை ஸ்வச் பாரத் அபியான் தொடர்பானது என்று பிரதமர் மோடி கூறினார். ஜல் ஜீவன் இயக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், 3 ஆண்டுகளில் 7 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார். "இது ஒரு சாதாரண சாதனையல்ல. சுதந்திரத்தின் 7 தசாப்தங்களில், நாட்டின் 3 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் மூலம் தண்ணீர் கிடைத்தது"என்று அவர் மேலும் கூறினார்.

Input & Image courtesy:ABP News

Tags:    

Similar News