குஷிநகரில் அமைக்கப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி!
உத்தரப்பிரதேசம் மாநிலம், குஷிநகர் புத்த மதத்தினரின் புதிதத்திலம் ஆகும். அங்குதான் புத்தர் மகாபரி நிர்வாணம் (பிறவா நிலை) அடைந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது அங்கு ரூ.250 கோடி மதிப்பீட்டில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டது. இது உள்நாட்டு மற்றும் சர்வதேச பக்தர்கள் இந்த பகுதிக்கு வருகை தருவதற்கு வசதியாக இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று (அக்டோபர் 20) திறந்துவைத்தார். இந்த விழாவில் விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. குஷிநகரில் விமான நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள், தொழிலாளர்கள், உள்ளூர் தொழிலதிபர்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் பயனடைவார்கள். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: ANI