வாரணாசியில் வளர்ச்சி பணிகளை நள்ளிரவிலும் ஆய்வு செய்த பிரதமர் மோடி!
காசியில் முக்கிய வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற்கொண்டேன். இந்த புனித நகருக்கான சாத்தியப்பட்ட சிறந்த உட்கட்டமைப்புகளை உருவாக்குவது என்பது நமது உயரிய முயற்சி எனவும் குறிப்பிட்டிருந்தார்.
உத்தர பிரதேசம் மாநிலம், வாரணாசிக்கு பிரதமர் மோடி நேற்று (டிசம்பர் 13) வருகை புரிந்திருந்தார். இதன் பின்னர் வாரணாசியில் ரூ.339 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலை நாட்டு மக்களுக்கு திறந்து வைத்தார். இதனையடுத்து வாரணாசியில் பாஜக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதலமைச்சர்கள் உள்ளிட்டோருடன் ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த கூட்டம் நள்ளிரவு வரை நீடித்ததாக கூறப்படுகிறது.
Next stop…Banaras station. We are working to enhance rail connectivity as well as ensure clean, modern and passenger friendly railway stations. pic.twitter.com/tE5I6UPdhQ
— Narendra Modi (@narendramodi) December 13, 2021
இதன் பின்னர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடன் வாரணாசியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை பிரதமர் மோடி நள்ளிரவு நேரத்திலும் ஆய்வு மேற்கொண்டார். அவரது வருகையை அறிந்து கொண்ட மக்கள் இரவு நேரத்திலும் சாலையின் இருபுறங்களிலும் கூடியிருந்தனர். அவர்களை பார்த்து கையசைத்து சென்றார்.
Just concluded an extensive meeting in Kashi with @BJP4India Chief Ministers and Deputy Chief Ministers. pic.twitter.com/UCUsMndhwW
— Narendra Modi (@narendramodi) December 13, 2021
இது குறித்து பிரதமர் மோடி அதிகாலை 12.25 மணியளவில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், காசியில் முக்கிய வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற்கொண்டேன். இந்த புனித நகருக்கான சாத்தியப்பட்ட சிறந்த உட்கட்டமைப்புகளை உருவாக்குவது என்பது நமது உயரிய முயற்சி எனவும் குறிப்பிட்டிருந்தார்.
Source, Image Courtesy: Twiter