பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்புக் குறைபாடுக்கு யார் காரணம் - குழு தாக்கல் செய்த அறிக்கையில் வெளியான பகீர் தகவல்
பஞ்சாபில் பிரதமர் பாதுகாப்பு குறைபாட்டிற்கு காரணம் என்பது தொடர்பாக 5 பேர்கொண்ட குழு தாக்கல் செய்த அறிக்கை.
ஜனவரி 5 அன்று விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தினால் பஞ்சாப் மாநிலத்தின் ஹுசைனிவாலாவிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள மேம்பாலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் கார் சுமார் 20 நிமிடங்கள் வரை சிக்கிக்கொண்டது. இதனால் ஏற்பட்ட "பாதுகாப்புக் குறைபாடு" சம்பந்தமாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
பிரதமரின் பஞ்சாப் வருகையின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரிக்க பஞ்சாப் அரசு, பஞ்சாப் அரசும் தனித்தனியாகக் குழுக்களை அமைத்துள்ளன. இந்த 2 குழுக்களும் தங்களது விசாரணையை தற்போதைக்கு மேற்கொள்ள வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் முன்னரே தெரிவித்துள்ளது. அதற்குப் பதிலாக ஐந்து பேர் கொண்ட குழுவை, உச்ச நீதிமன்றம் அமைத்து இருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு சமர்ப்பித்த அறிக்கையை வியாழக்கிழமை இன்று தாக்கல் செய்துள்ளது. கமிட்டியின் அறிக்கையைப் படித்த உச்ச நீதிமன்றம், ஃபெரோஸ்பூர் எஸ்.எஸ்.பி போதிய பலத்துடன் இருந்தும் தனது பணியைச் செய்யத் தவறி விட்டதாகவும், இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே பிரதமர் வருகை தெரிவிக்கப்பட்ட நிலையிலும் இது நடந்துள்ளது. சுப்ரீம் கோர்ட் அமைத்த கமிட்டி, பிரதமரின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான தீர்வு நடவடிக்கைகளை பரிந்துரைத்தது. இந்த அறிக்கையை அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Input & Image courtesy: Times of India