ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தில் மற்றொரு மைல்கல்: பிரதமர் மோடி பாராட்டு!
காஷ்மீரின் சிறந்த கலாச்சாரம், கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தும் விடாஸ்டா நிகழ்ச்சி.
காஷ்மீரின் சிறந்த கலாச்சாரம், கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தும் விடாஸ்டா நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். காஷ்மீரின் சிறந்த கலாச்சாரம், கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக 2023 ஜனவரி 27 முதல் 30-ந் தேதி வரை விடாஸ்டா நிகழ்ச்சிக்கு கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்ச்சி காஷ்மீரின் வரலாற்று சிறப்புமிக்க அடையாளத்தை மற்ற மாநிலங்களுக்கு விளக்கப்படுகிறது. இது ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற எழுச்சியின் அடையாளமாக திகழ்கிறது. அமிர்தப் பெருவிழாவின் ட்விட்களுக்கு பிரதமர் ட்விட்டரில் தனது பதிலை சொல்லி இருந்தார். காஷ்மீரின் சிறந்த பாரம்பரியம், பன்முக தன்மை மற்றும் தனித்துவத்தை அனுபவிக்க ஒரு அருமையான முன்னெடுப்பு என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்தியா G20 தலைமை பொறுப்பை ஏற்று பிறகு பல்வேறு நாடுகளில் கவனம் இந்திய பக்கம் திருப்பி இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலங்களும் தற்போது தனித்துவம் பெறும் நிலைக்கு முன்னேறி இருக்கிறது என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற வகையில் இந்த ஒரு திட்டத்தின் மூலமாக காஷ்மீர் பயனடைய இருக்கிறது.
Input & Image courtesy: News