விவசாயிகள் கலவரத்தில் காயமடைந்த போலீசார்! நேரில் சென்று நலம் விசாரித்த உள்துறை அமைச்சர்!

விவசாயிகள் கலவரத்தில் காயமடைந்த போலீசார்! நேரில் சென்று நலம் விசாரித்த உள்துறை அமைச்சர்!

Update: 2021-01-28 17:10 GMT

விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் ஏராளமான போலீசார் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.

கடந்த 2 மாதங்களாக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினவிழாவில் டிராக்டர் பேரணி நடத்த போலீசாரிடம் விவசாயிகள் அனுமதி கேட்டனர். விவசாயிகளுக்கு நிபந்தனையுடன் போலீசார் அனுமதி வழங்கினர். இதனையடுத்து கடந்த 26ம் தேதி டிராக்டர் பேரணி என்று வன்முறையில் ஈடுபட ஆரம்பித்தனர்.

அவர்களை கட்டுப்படுத்த போலீசார் முயற்சி செய்தனர். அப்போது போலீசாரை விவசாயிகள் போர்வையில் மறைந்திருந்த தீவிரவாதிகள் போலீசாரை ஆயுதங்களால் தாக்கினர். இதில் 100க்கும் அதிகமான போலீசார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் போராட்டத்தில் காயமடைந்தவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நலம் விசாரித்தார். அவர்களுடன் காவல்துறை உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News