பிரதமரின் மலிவுவிலை மக்கள் மருந்தகங்கள்... உண்மையில் அற்புதம்... பிரதமர் பதிவு!

பிரதமரின் மலிவுவிலை மக்கள் மருந்தகங்கள் ஏழை மக்கள் பணம் குறிப்பிடத்தக்க அளவில் சேமிப்பதை உறுதி செய்துள்ளது.

Update: 2023-04-20 01:04 GMT

பிரதமரின் மலிவுவிலை மக்கள் மருந்தகங்கள் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பணம் குறிப்பிடத்தக்க அளவில் சேமிப்பதை உறுதி செய்துள்ளது. உண்மையில் பல்வேறு ஏழை எளிய மக்கள் இந்த திட்டத்தின் மூலமாக பயன் அடைந்து இருக்கிறார்கள். வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கும் தரமான மருந்து பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்திற்காக மத்திய அரசு பாடுபட்டு வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.  


பிரதமரின் மலிவு விலை மக்கள் மருந்தகங்களை G20 பிரதிநிதிகள் குழுவினர் நேரில் பார்வையிட்டிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள ட்விட்டருக்கு பதில் அளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தனது கருத்துக்களை முன்வைத்து இருக்கிறார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், "குறைந்த விலையில் தரமான மருத்துவ சேவையை உறுதி செய்வதற்கான முன்னெடுப்பின் அடையாளமாக, பிரதமரின் பாரதிய ஜன் ஔஷாதி பரியோஜனா எனப்படும் மலிவுவிலை மக்கள் மருந்தகத் திட்டம் திகழ்கிறது. இந்தத் திட்டம் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பணத்தை குறிப்பிடத்தக்க அளவில் சேமிப்பதை உறுதி செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளை பார்வையிடும் வாய்ப்பு ஜி20 பிரதிநிதிகளுக்கு கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது" என கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News