2021-22 நிதியாண்டின் இலக்கை வெறும் 6 மாதங்களில் எட்டிய மக்கள் மருந்தக திட்டம் - ஊடக வெளிச்சத்துக்கு வராத மத்திய அரசின் சாதனை..!

Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana (PMBJP) achieves the target of FY 2021-22 in just 6 months

Update: 2021-10-07 00:45 GMT

பிரதமரின் இந்திய மக்கள் மருந்தக திட்டத்தை செயல்படுத்தும் முகமையான இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் அலுவலகம், 2021-22 நிதியாண்டின் இலக்கான 8,300 மருந்தகங்களை திறப்பதை 2021 செப்டம்பர் இறுதிக்குள் அடைந்தது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களும் இத்திட்டத்தின் கீழ் வந்துள்ளன. அனைத்து கடைகளுக்கும் மருந்துகள் உடனுக்குடன் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக தகவல் தொழில்நுட்பம் சார்ந்த திறன்மிகு தளவாடங்கள் மற்றும் விநியோக சங்கிலி அமைப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

1,451 மருந்துகள் மற்றும் 240 அறுவை சிகிச்சை கருவிகள் பிரதமரின் இந்திய மக்கள் மருந்தக திட்டத்தின் கீழ் தற்போது கிடைக்கின்றன. இதில் கிடைக்கும் மருந்துகளின் விலை சந்தை விலையை விட 50 முதல் 90 சதவிகிதம் குறைவாக உள்ளது.

2020-21 நிதியாண்டில், ரூ 665.83 கோடி விற்பனையை (அதிகபட்ச சில்லரை விலையில்) பிரதமரின் இந்திய மக்கள் மருந்தக திட்டம் எட்டியுள்ளது. இதன் மூலம் சுமார் ரூ 4,000 கோடியை நாட்டு மக்கள் சேமித்துள்ளனர்.


Tags:    

Similar News