கர்ப்பிணி பெண் வனக்காவலர் மீது கொடூர தாக்குதல்!

Update: 2022-01-20 16:59 GMT

மகாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மூன்று மாத கர்ப்பிணியான பெண் வனப்பாதுகாவலைரை அவரது கணவருடன் சேர்ந்து முன்னாள் சர்பஞ்ச் மற்றும் அவரது மனைவி தாக்கியுள்ள வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேற்கு மகாராஷ்டிரா மாவட்டத்தில் உள்ள பல்சவாடே எனற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் கர்ப்பிணியாக உள்ள பெண் வனப்பாதுகாவலர் ஒருவரை கிராம வனமேலாண்மைக் குழுவின் தலைவரான ராம்சந்திர ஜாங்கர் என்பவர் கொடுரமாக தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது பற்றி பெண் வனப்பாதுகாவலர் புகார் அளித்ததின் பேரில் சதாரா தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெண் வனப்பாதுகாவலர் கர்ப்பிணியாக இருப்பதால் அவரது குழந்தையின் உடல் நலம் பற்றி பரிசோதனை மேற்கொண்ட பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் மீது மேலும் சட்டம் பாயும் எனவும் போலீசார் கூறியுள்ளனர். இது போன்ற மோசமான சம்பவத்துக்கு மகாராஷ்டிரா அரசுக்கு மகளிர் அமைப்பினர் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

Source, Image Courtesy: Times Now

Tags:    

Similar News