காந்தியடிகளின் அறிவுரைகளை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்: குடியரசு தலைவர் வலியுறுத்தல்!
டெல்லி பல்கலைக்கழகத்தின் 99வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்பு.
டெல்லி பல்கலைக்கழகத்தின் 99வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், தில்லி பல்கலைக்கழகம் இந்தியாவை அதன் அனைத்து செழுமையிலும் பன்முகத்தன்மையிலும் பிரதிபலிக்கிறது என்று கூறலாம். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சிறந்து விளங்கும் ஒவ்வொரு பகுதியிலும் தில்லி பல்கலைக்கழகத்தின் ஒரு அம்சம் உள்ளது என்றும் கூறலாம்.
இருப்பினும், எந்த நிறுவனமும் அதற்கு கிடைத்துள்ள பெருமையினால் தனது வளர்ச்சி பணியை நிறுத்திவிட முடியாது. இன்றைய வேகமான மாற்றங்களின் உலகில், ஒரு நிறுவனம் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும். தில்லி பல்கலைக்கழக சமூகம், நாட்டில் உள்ள பிற பல்கலைக் கழகங்களைச் சிறப்பான முறையில் வழிநடத்திச் செல்வதற்குக் கடமைப்பட்டிருப்பதாக உணர வேண்டும். அதன் மூலம், உலக அளவில் ஒப்பிடக்கூடிய உயர்கல்வி நிறுவனங்களில் ஒரு இடத்தைப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அனைத்து மொழிகளையும் கலாச்சாரங்களையும் நாம் மதிக்க வேண்டும், வரவேற்க வேண்டும், ஆனால் எப்போதும் நமது வேர்களுடன் இணைந்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார். புத்துணர்ச்சி மற்றும் படைப்பாற்றல் வேர்களில் இருந்து வருகிறது. இந்திய மண்ணுடன் இணைந்திருக்கும் நிலையில், உலகில் கிடைக்கும் சிறந்த அறிவைப் பெறுவதற்கு காந்தியடிகளின் அறிவுரைகளை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
Input & Image courtesy: News