பல துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது: குடியரசுத் தலைவர் பெருமிதம்!

சமூகத்தின் அடிப்படையில் மதிப்பின் அடித்தளமாகப் பெண்கள் என்ற தேசிய மாநாடு.

Update: 2023-02-12 05:03 GMT

சமூகத்தின் அடிப்படையில் மதிப்பின் அடித்தளமாகப் பெண்கள் என்ற தேசிய மாநாடு, குடும்பத்திற்கு அதிகாரமளித்தல் என்ற அகில இந்திய விழிப்புணர்வு இயக்கம் ஆகியவற்றை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார். சமூகத்தின் அடிப்படையில் மதிப்பின் அடித்தளமாக பெண்கள் என்ற தேசிய மாநாடு, குடும்பத்திற்கு அதிகாரமளித்தல் என்ற அகில இந்திய விழிப்புணர்வு இயக்கம் ஆகியவற்றை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குருகிராமில் உள்ள ஓம் சாந்தி பிரம்ம குமாரிகள் உறைவிட மையத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், சமூகத்தின் அடிப்படையில் மதிப்பின் அடித்தளமாக பெண்கள் என்ற தேசிய மாநாடு இன்று மிகவும் அவசியமாகும் என்று கூறினார். இந்திய சமூகத்தின் மதிப்புகளையும், நெறிமுறைகளையும் வடிவமைத்ததில் பெண்கள் முக்கியப் பங்காற்றியுள்ளதாக தெரிவித்தார். இந்த மையத்தில் பெண்களின் மூலம் இந்தியாவின் மதிப்புகளை புதுப்பிக்க பிரம்மகுமாரிகள் அமைப்பு முயற்சித்துள்ளதாக கூறினார். இது உலகிலேயே பெண்களால் நடத்தப்படும் மிகப்பெரிய ஆன்மிக மையம் என்று தெரிவித்த அவர், இங்குள்ள 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சகோதரிகள், இந்திய கலாச்சாரம் மற்றும் ஆன்மிகப் பாரம்பரியத்தை சுமார் 140 நாடுகளில் பரப்புவதாக குறிப்பிட்டார்.


பெண்களின் அதிகாரம் குறித்து பேசிய குடியரசுத் தலைவர், எப்போதெல்லாம் பெண்கள் சமமான வாய்ப்புகளை பெறுகிறார்களோ அப்போது அவர்கள் ஆண்களுக்கு நிகராக செயல்படுவதாகவும், ஒவ்வொரு துறையிலும் சில நேரங்களில் அவர்களை விட சிறப்பானவர்களாக திகழ்கின்றனர் என்றும் தெரிவித்தார். பல துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக அவர் கூறினார். எனினும், அவர்களில் பலர், உயர்ந்த நிலையை அடைய இயலவில்லை என்று அவர் தெரிவித்தார். தனியார் துறையில் குறிப்பிட்ட நிலையில், பெண்களின் பங்களிப்பு குறைந்துள்ளதாக அவர் கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News