கார்கில் வெற்றி தினத்தில் பங்கேற்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக் பகுதிகளுக்கு சென்றுள்ளார். இதற்காக அவர் நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டார்.

Update: 2021-07-26 01:47 GMT

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக் பகுதிகளுக்கு சென்றுள்ளார். இதற்காக அவர் நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டார்.


இதன் பின்னர் பகல் 11.15 மணியளவில் ஸ்ரீநகர் விமான நிலையம் சென்றடைந்தார். அவரை ஆளுநர் மனோஜ் சின்ஹா வரவேற்றார்.


4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று லடாக்கின் திராஸ் பகுதிக்கு சென்று, கார்கில் போர் வெற்றி தினத்தில் அங்கு அமைக்கப்பட்ட நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளார். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News