மும்பையில் சத்ரபதி சிவாஜியை புகழ்ந்த திரௌபதி முர்மு
மும்பையில் மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜி குறித்து குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு புகழ்ந்து பேசி உள்ளார்.
மும்பையில் மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜி குறித்து குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு புகழ்ந்து பேசி உள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கும் திரௌபதி முர்மு தனக்கு ஆதரவு திரட்டுவதற்காக நேற்று மாலை மும்பைக்கு வருகை புரிந்தார்.
அப்போது அவரை மும்பை விமான நிலையத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வரவேற்றனர்.
பின்னர் அவருக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் நடந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ, எம்பிக்கள் முன்னிலையில் அவர் பேசும் பொழுது, 'பா.ஜ.க'வின் நாடாளுமன்ற குழு ஜனாதிபதி வேட்பாளருக்கான பெயரை உறுதி செய்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி எனக்கு போன் செய்தார், அவர் போன் செய்து எனக்கு தகவல் தெரிவித்தவுடன் சிறிது நேரம் எனக்கு பேச்சே வரவில்லை! அவருக்கும் பா.ஜ.க'விற்கும் நன்றி' என தெரிவித்தார்
தொடர்ந்து பேசிய திரௌபதி முர்மு மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி, அம்பேத்கர், சாவித்திரிபாய் பூலே ஆகியோர் இந்த சமுதாயத்திற்கு செய்த பணிகளை நினைவு கூர்ந்து பேசினர் பழங்குடி இனத்திலிருந்து தான் வந்திருப்பதாகவும் அரசியலுக்கு வரும் முன்பு குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுத்தேன் எனவும் தெரிவித்தார்.