தடுப்பு நடவடிக்கைகள்.. இந்தியாவில் வேகமாக குறைந்து வரும் கொரோனா தொற்று..!

தடுப்பு நடவடிக்கைகள்.. இந்தியாவில் வேகமாக குறைந்து வரும் கொரோனா தொற்று..!

Update: 2020-12-02 11:10 GMT

கொரோனா வைரஸ் தொற்று ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகரிக்க தொடங்கியது. அப்போது இறப்பு விகிதமும் அதிகரிக்க தொடங்கியது. இதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.


இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 94 லட்சத்து 99 ஆயிரத்து 414 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. 501 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,38,122 ஆக உயர்ந்துள்ளது.


மேலும், இதுவரை கொரோனாவில் இருந்து 89,32,647 பேர் மீண்டுள்ளனர். அதில் 4,28,644 பேர் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவின் 2ம் கட்ட அலை வீசி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் உத்திர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் காலவரையற்ற இரவு நேர ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகிறது.

Similar News