முன்பு நெல், கோதுமைக்கு மட்டுமே ஆதார விலை, ஆனால் மோடி ஆட்சியில் எல்லா விளை பொருள்களுக்கும் நீட்டிப்பு: சில உண்மைகள்.!

முன்பு நெல், கோதுமைக்கு மட்டுமே ஆதார விலை, ஆனால் மோடி ஆட்சியில் எல்லா விளை பொருள்களுக்கும் நீட்டிப்பு: சில உண்மைகள்.!

Update: 2020-12-09 11:36 GMT

பிரதமர் நேரேந்திர மோடி ஆட்சியில் அனைத்து விளை பொருள்களுக்கும் குறைந்த பட்ச ஆதார விலை தரப்படுவதால், விவசாயிகளின் விளை பொருள்களின் விலை கடந்த 6 ஆண்டுகளில் 43 சதவீதத்தில் இருந்து 73 சதவீதம் வரை உயர்ந்துள்ளது!!   

ஆனால் பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதாரவிலை ஏதோ குறைக்கப்பட்டது போலவும், இந்த முறையை மோடி அரசு நிறுத்தவுள்ளது என்றும் எதிர்கட்சிகள் பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளன. 

உண்மையில் நரேந்திர மோடி ஆட்சிக்கு முன்பிருந்த ஆட்சிகளில் கோதுமை, அரிசிக்கு மட்டுமே குறைந்த பட்ச ஆதார விலை அளிக்கப்பட்டது. மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் கோதுமை மற்றும் அரிசிக்கு மட்டுமல்லாமல் பயறுவகைகள், கடுகு, பருத்திக்கு கூட இந்திய வரலாற்றில் முதன்முறையாக குறைந்தபட்ச ஆதார விலை முறையை கடந்த 6 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறார்.

அதே சமயம் ஒவ்வொரு விளை பொருள்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையும் மோடி அவர்களின் ஆட்சியில் அவ்வப்போது அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 6 ஆண்டுகளாக படிப்படியாக விவசாயிகளின் வருவாயும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக 2013 - 14 ஆம் ஆண்டில் கோதுமைக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.1400 அளிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அளிக்கப்படும் விலை 1975 ரூபாயாகும். அதாவது கோதுமைக்காக அரசு அளிக்கும் குறைந்த பட்ச ஆதாரவிலையுடன் 41 சதவீதம் கோதுமையின் கொள்முதல் விலை கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்பதே உண்மையாகும்.

அதேபோல நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு 2013 - 14 ஆம் ஆண்டில் 1310 ரூபாயாக இருந்தது. ஆனால் இப்போது1868 ஆக கொள்முதல் விலை அதிகரித்து தரப்படுகிறது. அதாவது 43 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல சிவப்பு துவரம் பருப்புக்கு 5 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பத்தில் குவிண்டாலுக்கு ரூ.2950 மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது 75 வீதம் வரை உயர்ந்து குவிண்டாலுக்கு ரூ. 5100 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

அதேபோல உளுந்து பயிருக்கு  5 ஆண்டுகளுக்கு முன்  குவிண்டாலுக்கு ஆதார விலையுடன் ரூ.4300 கொள்முதல் விலையாக வழங்கப்பட்டது. ஆனால் இப்போது 6000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.

பாசிப்பருப்புக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்னால் குவிண்டாலுக்கு 4500 ரூபாய்வரை மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது 60 சதவீதம் வரை கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டு 7196 ரூபாயாக  வழங்கப்படுகிறது. 

அதேபோல துவரம் பருப்புக்கு  5 ஆண்டுகளுக்கு முன் 4300 ரூபாய் வழங்கப்பட்டது. இப்போது 6000 ரூபாய் வரை உயர்த்தி வழங்கப்படுகிறது.

கடுகுக்கு 5 ஆண்டுகளுக்கு முன் ஆதார விலையுடன் சேர்த்து குவிண்டாலுக்கு 3050 ரூபாய் வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டில் இப்போது 4650- ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல கடலை பருப்பு விலை 5 ஆண்டுகளுக்கு முன்னால்3100 ரூபாயாக இருந்தது. இப்போது 5100 ஆக உயர்த்தி அளிக்கப்படுகிறது. 

அதேபோல வேர்கடலைக்கு குவிண்டால் ஒன்றுக்கு 5 ஆண்டுகளுக்கு முன் 4000 ரூபாய் ஆதார விலையுடன் வழங்கப்பட்டது. 

நடப்பு ஆண்டில் ஆதார விலையுடன் 5275 ரூபாய் வரை அளிக்கப்படுகிறது.   

இதன் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கான விலை நெல்லுக்கு 43 சதவீதத்தில் இருந்து மசூர் பருப்புக்கு 73 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என்பதே உண்மையாகும். 

இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரித்ததுடன் அவர்களின் காழ்க்கை தரமும் உயர்ந்துள்ளது. மேலும் விவசாயத்தை சுலபமாக செய்யும் வகையில் பல்வேறு வசதிகளையும், வாய்ப்புகளையும் மத்திய அரசு அளித்து வருகிறது. 

ஆனால் எதிர்கட்சிகள் திட்டமிட்டு இந்த உண்மைகளை மறைப்பதுடன், குறைந்த பட்ச ஆதார விலை விஷயத்தில் பொய் பேசி விவசாயிகளை தவறாக திசை திருப்புகின்றன என்பதே உண்மையாகும்.  
 

Similar News