கிருஷ்ணகிரி விவசாயி உடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்.!

கிருஷ்ணகிரி விவசாயி உடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்.!

Update: 2020-12-25 18:12 GMT

பிரதமர் மோடி இன்று கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுடன் கலந்துரையாடியுள்ளார். இன்று டெல்லியில் இருந்தவாரே வீடியோ கான்பரண்ஸ் மூலமாக இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினார். இதில் ஏராளமான விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி ஒரு விவசாயிடம் கேள்வி கேட்டதாவது: சென்னையில் தண்ணீர் குறைவாக கிடைக்கிறது விவசாயம் எப்படி செய்கிறீர்கள் என பிரதமர் கேள்வி எழுப்பினார். அப்போது கிருஷ்ணகிரியை சேர்ந்த விவசாயி சுப்ரமணி என்பவர் சொட்டு நீர் பாசனம் மூலமாக விவசாயம் செய்வதாக பதில் அளித்தார்.

அப்போது அவர் மேலும் பேசியதாவது: தோட்டகலைத்துறை மூலமாக 3 ஏக்கர் பரப்பளவிற்கு 1 லட்சத்து 33ஆயிரம் மதிப்பில் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து கொடுத்துள்ளனர்.

இதன் மூலம் நல்ல லாபம் மற்றும் மகசூல் கிடைக்கிறது. கடந்த ஆண்டு சாகுபடியில் 40 ஆயிரம் லாபம் கிடைத்த நிலையில் சொட்டு நீர் பாசனம் மூலம் இந்த ஆண்டு 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக லாபம் கிடைத்துள்ளது என கிருஷ்ணகிரி விவசாயி பெருமையுடன் கூறினார்.

டெல்லியில் ஒரு பக்கம் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தாலும், மற்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் பிரதமர் மோடி கலந்துரையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
 

Similar News