77 அமைச்சர்களும் 8 குழுக்களாக பிரிப்பு: நிர்வாகத்தை மேம்படுத்த பிரதமர் மோடி அதிரடி மாற்றம்!
பிரதமராக பதவியேற்றதில் இருந்து மோடி பல்வேறு சீர்த்திருத்தங்களையும், ஆட்சி நிர்வாகத்தில் பல மாறுதல்களையும் செய்து வருகிறார்.
பிரதமராக பதவியேற்றதில் இருந்து மோடி பல்வேறு சீர்த்திருத்தங்களையும், ஆட்சி நிர்வாகத்தில் பல மாறுதல்களையும் செய்து வருகிறார். பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்று ஆட்சி நிர்வாகத்தில் மிகவும் கவனமுடன் கையாண்டு வருகிறார். இதற்கு என்று சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர்களையும் மாற்றி அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மத்திய அமைச்சர்களை அடிக்கடி அழைத்து 'சிந்தனை அமர்வு' என்ற பெயரில் கூட்டங்களை நடத்தி வருகிறார். இதுவரை 5 கூட்டங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி தனிநபர் செயல்திறன், திட்ட அமலாக்கம், அமைச்சரவை செயல்பாடு மற்றும் கட்சி ஒருங்கிணைப்பு நாடாளுமன்ற நடைமுறைகள் என்று ஒவ்வொரு கூட்டத்தின்போதும் வெவ்வேறு பொருள் பற்றி விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற நடைமுறைகள் பற்றிய கூட்டத்தின்போது, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதில் மோடி அரசின் செயல்திறன் மற்றும் திட்ட அமலாக்கத்தை இன்னும் மேம்படுத்தும் வகையில் நடைபெற்றது. மேலும், மொத்தம் 77 மத்திய அமைச்சர்களையும் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 9 முதல் 10 அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர். அதற்கு ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு மூத்த அமைச்சரையும் ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மத்திய அரசு செயல்படுத்தும் முக்கிய திட்டங்களை பற்றிய செயல்பாடுகளை தெரிவிக்க ஒவ்வொரு அமைச்சரவையின் அலுவலகத்திலும் வலைத்தளம் உருவாக்குதல், ஒவ்வொரு அமைச்சரும் எடுத்துள்ள முடிவுகளை கண்காணிப்பது மற்றும் அமைப்புகளை உருவாக்குதல், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் நிறைவேற்றிய திட்டங்களின் விவரங்களை சேகரித்து இக்குழுவுக்கு அளிக்கின்ற பணிகளாகும்.
அது மட்டுமின்றி ஆராய்ச்சி, தகவல் தொடர்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் நிபுணத்துவம் கொண்ட 3 இளம் தொழில்நுட்ப நிபுணர்களை கொண்டுள்ள ஒரு குழுவையும் அமைப்பது இந்த குழுவினுடைய பணியாகும். இவர்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் ஓய்வு பெற்றுள்ள அதிகாரிகளின் கருத்துக்களையும் அவர்களின் அனுபவங்களையும் கேட்டுக்கொண்டு திட்டமிடலாம்.
Source, Image Courtesy: Daily Thanthi