11 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம்: புத்தாண்டில் வழங்குகிறார் பிரதமர் மோடி!
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்கின்ற திட்டத்தினை மத்திய அரசு கடந்த 2018ம் ஆண்டு முதல் அமல்படுத்தி வருகிறது. அதன்படி தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 அவர்களின் வங்கி கணக்குகளியே செலுத்தப்படுகிறது. இவை ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது.

இந்த பணம் விவசாயிகளுக்கு பெரிதும் உதவுகிறது. பயிர்களுக்கு தேவையான உரம், மற்றும் பயிர் சாகுபடி போன்றவற்றிற்கு பயன்படுத்துகின்றனர். ஆண்டுக்கு மூன்று முறை வங்கிகளிலேயே பணம் வருவதால் எந்த ஒரு இடைத்தரகருக்கும் கமிஷன் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அதன்படி இந்த திட்டத்தின் வாயிலாக சுமார் 11 கோடியே 60 லட்சம் விவசாயிகள் பயன் அடைகின்றனர்.
இந்நிலையில், அடுத்த தவணையாக புத்தாண்டு தினமான சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் பிரதமர் மோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்துகிறார். ஒரே நேரத்தில் அனைத்து விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் செலுத்தப்படுகிறது. புத்தாண்டில் பணம் வருவதால் விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனை மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவித்துள்ளார் என்பது குறப்பிடத்தக்கது.
Source: Daily Thanthi
Image Courtesy:Twiter