ஜி.எஸ்.டி'யால் ஒரே நாடு, ஒரே வரி என்ற நோக்கம் நிறைவேறியது - பெருமையுடன் கூறும் பிரதமர் மோடி

ஒரே நாடு, ஒரே வரி என்ற நோக்கத்தை ஜி.எஸ்.டி நிறைவேற்றியுள்ளது என பிரதமர் மோடி பெருமையாக கூறியுள்ளார்.

Update: 2022-07-02 06:39 GMT

ஒரே நாடு, ஒரே வரி என்ற நோக்கத்தை ஜி.எஸ்.டி நிறைவேற்றியுள்ளது என பிரதமர் மோடி பெருமையாக கூறியுள்ளார்.

மத்திய, மாநில அரசுகளால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரை விதிப்பாக ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை பிரதமர் மோடி தரையிலான அரசு அறிமுகப்படுத்தி ஐந்து ஆண்டுகள் நேற்றுடன் நிறைவடைந்தன.

இதனை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளதாவது, சரக்கு மற்றும் சேவை வரி, ஒரு பெரிய வரி சீர்திருத்த முறையாகும் இது வணிகம் செய்வது எளிதாக்குகிறது. ஒரே நாடு, ஒரே வரி என்று நோக்கத்தை அதை நிறைவேற்றியுள்ளது.

புதிய இந்தியாவின் பொருளாதார கட்டமைப்பை வரையறுப்பதிலும், குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் ஜி.எஸ்.டி முக்கிய பங்காற்றி உள்ளது' என குறிப்பிட்டார். 


 

Source - Maalai malar



Similar News