இந்தியாவில் விண்வெளித் துறையில் தனியாரின் முதலட்டை அதிகரிக்கும் நோக்கத்தில் விரைவாக புதிய கொள்கை வெளியிடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம், நவ்சாரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி துவக்கி வைக்க சென்றார். அப்போது அவருக்கு பழங்குடியின மக்கள் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்ட பிரதமர் குஜராத் கவுரவ் அபியான் என்ற பேரணியில் கலந்து கொண்டார். அப்போது அங்கு ரூ.3,050 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் அவர் பேசியதாவது: சுதந்திரத்திற்கு பின்னர் நீண்ட காலம் ஆட்சியில் இருந்தவர்கள் பழங்குடியின மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். அதுவும் பழங்குடியின மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் சாலை வசதிகள் கூட செய்துக்கொடுக்கவில்லை என்றார்.
Unlocking India's potential in space sector! Speaking at inauguration of IN-SPACe headquarters in Bopal, Ahmedabad. https://t.co/4PyxyIMh6I
— Narendra Modi (@narendramodi) June 10, 2022
மேலும், தங்களைப் பொறுத்தமட்டில் வாக்குகளைப் பெறுவதற்காகவோ அல்லது தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவோ வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவில்லை. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவே இது போன்ற வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்றார்.
இதனை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி அகமதாபாத்தில் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் தலைமையகத்தை திறந்து வைத்து பேசியதாவது: இந்திய விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பு இரண்டு சதவீதம் மட்டுமே உள்ளது. எனவே தனியார் துறையினரின் பங்களிப்புடன் சர்வதேச விண்வெளித்துறையை பொறுத்தமட்டில் இந்தியாவின் பங்களிப்பை உயரச் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இதனால் தனியார் துறையின் பங்களிப்பையும் அதிகரிக்க செய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Source: News 18 Tamilnadu
Image Courtesy:Twitter