இயற்கையை பாதுகாப்பதில் தூத்துக்குடி மக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்: 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு!

இயற்கையை பாதுகாப்பதில் தூத்துக்குடி மாவட்ட மக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என மன்கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், சிறிய தீவுகள், திட்டுக்களில் கடலில் மூழ்காமல் இருப்பதற்காக பனைமரங்களை நட்டு வைக்கின்றனர் என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

Update: 2021-11-28 08:33 GMT

இயற்கையை பாதுகாப்பதில் தூத்துக்குடி மாவட்ட மக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என மன்கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், சிறிய தீவுகள், திட்டுக்களில் கடலில் மூழ்காமல் இருப்பதற்காக பனைமரங்களை நட்டு வைக்கின்றனர் என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடி மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று ரேடியோ மூலமாக மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவர் பிரதமராக பதவியேற்ற அன்று முதல் தற்போது வரை மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்வார். அது மட்டுமின்றி நல்லது செய்கின்ற அனைவரையும் தவறாமல் பாராட்டுக்களையும் தெரிவித்துவிடுவார்.

அதே போன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) 83வது மன் கி பாத் நிகழ்ச்சின் வாயிலாக பிரதமர் மோடி பேசும்போது: இந்த மாதம் கடற்படை தினம் மற்றும் ஆயுதப்படைகளின் கொடி தினத்தை நாம் கொண்டாடுகிறோம். கடந்த 1971ம் ஆண்டு நடைபெற்ற போரின் பொன்விழா ஆண்டினை டிசம்பர் மாதம் 16ம் தேதி கொண்டாடுகிறோம். இந்த நல்ல நேரத்தில் தைரியமிக்க நமது வீரர்களை நினைத்து பார்ப்பதுடன் அவர்களை வணங்குகிறேன். மேலும், இயற்கையை நாம் கவனித்தால் அது நம்மை சிறப்புடன் பாதுகாக்கும். பல்வேறு இடங்களில் உள்ள கடலோர பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதை நாம் அறிவோம். அது போன்ற அபாயம் உள்ள தூத்துக்குடியில் பல சிறிய தீவுகள் மற்றும் திட்டுகளுக்கு அபாயம் இருக்கிறது.

இதனிடையே கடல் பகுதிகளின் ஆபத்திற்கு இயற்கை வழியிலேயே தப்பிப்பதற்கான வழிகளை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நிபுணர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். இதற்காக தூத்துக்குடி மக்கள் தீவுகள் மற்றும் திட்டுகளில் பனைமரங்களை நட்டு வைக்கின்றனர். இந்த மரங்கள் புயல் மற்றும் சூறாவளி சமயங்களில் மிகவும் தைரியமாக நிற்கிறது. இதனால் இயற்கையை பாதுகாப்பது மட்டுமின்றி கடலோர பகுதிகளுக்கு ஏற்படுகின்ற ஆபத்தையும் தடுக்கின்ற நம்பிக்கை கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News