இசைஞானி இளையராஜாவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக நன்றி தெரிவித்திருப்பது சினிமா வட்டாரங்களில் மட்டுமின்றி அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பாக பேசப்படுகிறது.
புளு கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் சார்பில் அம்பேத்கரும், மோடியும் சீர்த்திருத்தவாதிகளின் சிந்தனையும், செயல் வீரர்களின் நடவடிக்கை பற்றிய நூலுக்கு இசைஞானி இளையராஜா அணிந்துரை எழுதியிருந்தார். அதாவது பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றார். குறிப்பாக பெண்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருவது அம்பேத்கரே பெருமைப்படுவார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இவரது பேச்சுக்கு பாஜகவுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே தமிழகத்தில் திமுக, திக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இசைஞானியின் கருத்தை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் அவர் மீது விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இதனை தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்தார். இசைஞானி கருத்து சொல்வதற்கு உரிமை உண்டு என்றார். இந்நிலையில், இளையராஜாவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, தன்னை பற்றிய நூலுக்கு அணிந்துரை எழுதியதற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Dinamalar