குறைந்த தடுப்பூசி பதிவு: 40 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் வகையில் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

Update: 2021-11-03 02:35 GMT

கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் வகையில் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மீண்டும் கொரோனா பரவாமல் இருப்பதற்கும் பொருளாதார ரீதியில் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட வேண்டும் என்று மத்திய அரசு திட்டம் தீட்டி அதற்கான பணிகளில் வேகமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால், நாட்டில் சுமார் 40 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் சதவீதம் குறைந்த அளவு உள்ளது.

இந்நிலையில், தடுப்பூசி போடுவதில் மிகவும் குறைந்த சதவீதமே பதிவாகியுள்ள 40 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி இன்று (நவம்பர் 3) காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்கிறார் என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

மேலும், 50 சதவீதத்திற்கும் குறைவாகவே முதல் டோஸ் போடப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் 2வது டோஸ் மிகவும் குறைவாக பதிவாகியுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் இந்த ஆலோசனையை மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Maalaimalar

Image Courtesy:India Today


Tags:    

Similar News