கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்: பிரதமர் மோடி வழங்குகிறார்!

Update: 2022-05-29 13:56 GMT

கொரோனா பெருந்தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்காக பிரதம மந்திரி நலத்திட்டம் (பி.எம்.கேர்ஸ் திட்டம்) மே 29, 2021 அன்று பிரதமரால் தொடங்கப்பட்டது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பெற்றோர்கள் இரண்டு பேரையோ அல்லது ஒருவரையோ அல்லது சட்டரீதியான பாதுகாவலரையோ, அல்லது தத்தெடுத்த பெற்றோர்களையோ இழந்த குழந்தைகளுக்கு ஆதவளிப்பதற்கு இத்திட்டம் தொடங்கப்பட்டது.

குழந்தைகளுக்காக விரிவாக பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலமாக அவர்களுக்கு உறைவிட வசதி செய்வதன் மூலமாக அவர்களுக்கு உறைவிட வசதி அளித்தல் அவர்கள் 23 வயது வரை ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்தல் மற்றும் மருத்துவ காப்பீடு மூலம் அவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்தல் இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்.

இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் பல நலத்திட்ட உதவிகளை நாளை மே 30ம் தேதி காலை 10.30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் மோடி வழங்க உள்ளார்.

Source: Daily Thanthi

Image Courtesy:The New Indian Express

Tags:    

Similar News