விவசாயிகளின் உண்மையான நலன் விரும்பி பிரதமர் மோடி.. உள்துறை அமைச்சர் புகழாரம்.!

விவசாயிகளின் உண்மையான நலன் விரும்பி பிரதமர் மோடி.. உள்துறை அமைச்சர் புகழாரம்.!

Update: 2020-12-25 16:21 GMT

.நாட்டில் உள்ள விவசாயிகளின் உண்மையான நலன் விரும்பி பிரதமர் மோடிதான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

 

டெல்லியில் உள்ள மெஹ்ராலி எனும் இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: விவசாயிகளுக்கு வருடம்தோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் பி.எம்., கிசான் திட்டத்தில் 3வது கட்ட தவணையாக பிரதமர் மோடி இன்று ரூ.18 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளார். இந்த நிதியுதவி மூலம் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன் பெறுவார்கள் என கூறப்படுகிறது. 

ஒட்டுமொத்த விவசாயிகளின் உண்மையான நலன் விரும்பி பிரதமர் மோடிதான். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்காகவே மாற்றியமைக்கப்பட்டது.

வேளாண் விளை பொருட்களுக்கு வழங்கப்பட்டு வரும் குறைந்தபட்ச ஆதார விலை முறையை யாராலும் நீக்க முடியாது, விவசாயிகளிடம் இருந்து நிலங்களையும் பறிக்க முடியாது.

விவசாயிகளுடனும், விவசாயிகள் சங்கத்துடனும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த முழுமனதுடன் மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், குறைந்தபட்ச ஆதார விலை நீக்கப்பட்டுவிடும் என்று விவசாயிகளை தவறாக எதிர்க்கட்சிகள் வழிநடத்தி வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
 

Similar News