தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் 105வது பிறந்த நாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் அதிமுகவினரையும் தாண்டி அனைத்து தரப்பு மக்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
தமிழகத்தில் எம்.ஜி.ஆர். நிறைவேற்றிய சத்துணவு திட்டம் இன்றும் உலக அளவில் பேசும் பொருளாக உள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் யாரும் பசியால் இருக்கக்கூடாது என்று மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அவரது திட்டம் இன்று வரை சிறப்புடன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்னும் பல்வேறு திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம்
பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன.
— Narendra Modi (@narendramodi) January 17, 2022
இந்நிலையில், எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன. அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Source: Twiter
Image Courtesy: Zee News