கடமைகளுக்கு முக்கியத்துவம் அளித்தால், லஞ்சம், ஊழலே இருக்காது: பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேச்சு!

பிரதமர் மோடி இன்று 85வது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அதன்படி இந்த மாதத்திற்கான நிகழ்ச்சி இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. இதில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி பேசுகையில், நாம் அனைவரும் நமது கடமைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

Update: 2022-01-30 10:17 GMT

பிரதமர் மோடி இன்று 85வது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அதன்படி இந்த மாதத்திற்கான நிகழ்ச்சி இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. இதில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி பேசுகையில், நாம் அனைவரும் நமது கடமைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் விடுமுறை நாட்களில் குடும்பம், குடும்பமாக போர் நினைவிடம் செல்லுங்கள். அங்கு அமர் ஜவான் ஜோதி, தேசிய போர் நினைவிடத்தில் சுடர் ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இளைஞர்களை கொண்டுள்ள நாட்டுக்கு சாத்தியம் அற்றது என்று ஏதுமில்லை. இளைஞர்களை கொண்டுள்ள நாட்டினால் எதனையும் சாதித்து காட்ட முடியும். நமது நாட்டில் பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

மேலும், நமது கடமைகளுக்கு முக்கியத்துவம் அளித்தால், லஞ்சம், ஊழல் போன்றவை இருக்காது. எனவே லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க மக்கள் தவறாமல் தங்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி உரையில் தெரிவித்திருந்தார்.

Source: Daily Thanthi

Image Courtesy: Hindustan

Tags:    

Similar News