மத்திய பட்ஜெட்: பிரதமர் மோடி நாடாளுமன்றம் வருகை!

2022, 23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் காகித மில்லா பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் 4வது முறையாகும். இந்த பட்ஜெட் பொதுமக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2022-02-01 05:08 GMT

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குழுவினர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் அமையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் காலை 11 மணிக்கு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: ANI

Similar News