வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளோம்: பிரதமர் பெருமிதம்!
இந்தியாவில் 150 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி வரலாற்று மிக்க மைல்கல்லை தொட்டுள்ளோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தியாவில் 150 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி வரலாற்று மிக்க மைல்கல்லை தொட்டுள்ளோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Prime Minister Narendra Modi inaugurates the Second Campus of Chittaranjan National Cancer Institute in Kolkata via video conferencing pic.twitter.com/2Aum41HLcv
— ANI (@ANI) January 7, 2022
கொல்கத்தாவில் உள்ள சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் 2வது வளாகத்தை பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்து அவர் பேசியதாவது: நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த சுமார் 150 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதித்துள்ளோம். இந்த சாதனை நாட்டில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியாளர்கள், சுகாதாரத்துறையினர் உள்ளிட்டோருக்கு நன்றி என்றார்.
மேலும், அடுத்து வருகின்ற 5 நாட்களில் 15 முதல் 17 வயதுடைய 1.5 கோடி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 150 கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை தொட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Source: Daily Thanthi
Image Courtesy: ANI