முதலமைச்சர்களுக்கு ஆலோசனைகளை வழங்கிய மோடி! முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதா?

Update: 2022-01-13 13:48 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இது குறித்து ஏற்கனவே உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தை பிரதமர் மோடி நடத்தியிருந்தார். அப்போது மாவட்ட அளவிலான சுகாதார உள்கட்டமைப்பை உறுதி செய்யவும், 15 முதல் 18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்தவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலா இன்று மாலை ஆலோசனை நடத்தி வருகின்றார்.

இதில் முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணியை துரிதப்படுத்தவும், அதிகப்படுத்தவும் உத்தரவு பிறப்பித்தார். மேலும், கொரோனா தொற்றை சமாளிக்க மருத்துவ உள்கட்டமைப்பை பலப்படுத்த முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். இதில் தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து வருவது பற்றியும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் பன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Source: Daily Thanthi

Image Courtesy:ANI

Tags:    

Similar News