மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் - பிரதமர் புகழஞ்சலி.!

மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் - பிரதமர் புகழஞ்சலி.!

Update: 2021-01-30 16:48 GMT

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் கொள்கைகள் பல லட்சம் பேருக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் அவரது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், "ஒரு நன்றியுள்ள தேசத்தின் சார்பாக, இந்த நாளில் தியாகத்தை தழுவிக்கொண்ட தேசத்தின் தந்தை மகாத்மா காந்திக்கு எனது தாழ்மையான அஞ்சலி. அமைதி, அகிம்சை, எளிமை வழிமுறைகளில் தூய்மை மற்றும் பணிவு போன்ற அவரது கொள்கைகளை நாம் கடைபிடிக்க வேண்டும். அவருடைய உண்மை மற்றும் அன்பின் பாதையைப் பின்பற்ற நாம் அனைவரும் உறுதியேற்போம்" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, மகாத்மா காந்தியின் கொள்கைகள் பல லட்சம் பேருக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும். இந்திய சுதந்திர போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூர்வோம். 

Similar News