75 –வது ஆண்டு விழாவை கொண்டாடும் NCC: பிரதமர் மோடி உரை!

28-ந் தேதி கரியப்பா மைதானத்தில் நடைபெற உள்ள NCC கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார்.

Update: 2023-01-28 05:40 GMT

டெல்லி கரியப்பா மைதானத்தில் வரும் 28-ந் தேதி மாலை 5.45 மணியளவில் நடைபெற உள்ள வருடாந்திர NCC பிரதமர் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இந்த ஆண்டு என்.சி.சி தொடங்கப்பட்ட 75 –வது ஆண்டை கொண்டாடுகிறது. இந்த நிகழ்ச்சியில், என்சிசியின் வெற்றிகரமான 75 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், பிரதமர் சிறப்பு அஞ்சல் தலை மற்றும் 75 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளார்.


இந்தக் கூட்டம் மெய்நிகர் வடிவில் பகல் இரவு நிகழ்ச்சியாக நடைபெறும். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்னும் கருப்பொருளைக் கொண்ட கலாச்சார நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. உலகமே ஒரே குடும்பம் என்னும் இந்தியர்களின் உண்மையான உணர்வில் 19 வெளிநாடுகளைச் சேர்ந்த 196 அதிகாரிகள் மற்றும் மாணவர் படையினர் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.


"இந்த ஆண்டு, என்.சி.சி அதன் தொடக்கத்தின் 75வது ஆண்டைக் கொண்டாடுகிறது. இந்த நிகழ்வின் போது, ​​என்.சி.சியின் வெற்றிகரமான 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், ஒரு சிறப்பு நாள் அட்டையையும், ₹ 75/- மதிப்பிலான பிரத்யேகமாக அச்சிடப்பட்ட நாணயத்தையும் பிரதமர் வெளியிடுவார்" என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Input & Image courtesy: PIB

Tags:    

Similar News