பிரதமர் வீடு கட்டும் திட்டம்! 2,691 கோடி ரூபாய் நிதியுதவி!

பிரதமர் வீடு கட்டும் திட்டம்! 2,691 கோடி ரூபாய் நிதியுதவி!

Update: 2021-01-21 07:30 GMT

வீடற்ற மக்களுக்காக மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி மூலம் வீடு கட்டப்பட்டு வருகிறது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் மூலமாக இந்த பணம் நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான நிதியை பிரதமர் மோடி ஒதுக்கியுள்ளார். வீட்டுவசதி திட்ட பயனாளிகளுக்கு 2,691 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 6 லட்சத்து 10 ஆயிரம் பயனாளிகளுக்கான நிதியுதவியை பிரதமர் மோடி இன்று விடுவித்துள்ளார். இதற்கான நிகழ்ச்சி இன்று டெல்லியில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த திட்டத்தின் கீழ் முதல் தவணை பெற்ற 80 ஆயிரம் பயனாளிகளுக்கான இரண்டாவது தவணை தொகை மற்றும் 5 லட்சத்து 30 ஆயிரம் பயனாளிகளுக்கான முதல் தவணைத் தொகை என 2 ஆயிரத்து 691 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவியால் கோடிக்கணக்கான மக்கள் வீடுகட்டும் வாய்ப்பினை பெற்று வருகின்றனர். இன்னும் பலர் வீடு கட்டுவதற்காக மத்திய அரசு பணத்தை விடுவிக்கவும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. 2021ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News