இளம் எழுத்தாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகையுடன் இலக்கிய பயிற்சி திட்டம்: மத்திய அரசு அறிவிப்பு.!

இந்தியாவில் உள்ள இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கின்ற வகையில், 75 நபர்களுக்கு 6 மாதங்களுக்கு தலா ரூ.50,000 உதிவித் தொகையுடன் இலக்கிய பயிற்சி அளிப்பதற்கு மத்திய அரசு முன்வந்துள்ளது. இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துகின்ற வகையிலும், உலக தரத்தில் இலக்கியங்களை கொண்டு செல்லும் வகையில், மத்திய அரசு ஊக்கத் தொகையுடன் இலக்கியப் பயிற்சியை அளிப்பதற்கு முன்வந்துள்ளது.

Update: 2021-06-10 11:50 GMT

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் ஆன நிலையில், 30 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தவும், இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளை உருவாக்கவும் மத்திய அரசு முன்வந்துள்ளது. இதில் இந்திய கலாச்சாரம், பண்பாடு, தேசிய ஒருமைப்பாடு, இலக்கியம், மொழி வளம், கலைகள் மற்றும் வாசித்தும், கட்டுரைகள், நாடகங்கள் உள்ளிட்டவைகளை இளைஞர்கள் படைக்க பிரதமர் மோடி இந்த திட்டத்தை அறிவித்துள்ளார்.

இதில் கலந்து கொண்டு https://innovateindia.mygov.in/yuva/ என்ற இணையதளத்தில் தங்களது படைப்புகளை விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் ஆன போட்டியில் தகுதியான 75 படைப்புகளை இந்திய அரசின் என்.பி.டி., என்னும் தேசிய புத்தக அறக்கட்டளையின் வல்லுனர் குழுவானது தேர்வு செய்யும். அதில் தேர்வானர்களின் படைப்புகள் வருகின்ற சுதந்திர தினம் அன்று இந்திய அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அடுத்த வருகின்ற 2022ம் ஆண்டு இளைஞர் தினமான ஜனவரி 12ம் தேதி நூலாக வெளியிடப்படும்.

இதில் தேர்வாகும் 75 இளம் படைப்பாளிகளுக்கு மூன்று மாத இலக்கிய பயிற்சியை, தேசிய அளவில் உள்ள எழுத்தாளர்கள் அளிப்பார்கள். அது மட்டுமின்றி 6 மாதங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்படும். இதில் 30 வயதுக்குட்பட்ட எழுத்தாளர்கள் கலந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News