செப்டம்பர் இறுதியில் பிரதமரின் அமெரிக்க பயணம் ! மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் !

இந்த மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2021-09-06 13:14 GMT

செப்டம்பர் இறுதியில் பிரதமர் மோடி அவர்கள் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடி இந்த மாதம் அமெரிக்கா செல்ல இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்களில் சார்பில் தற்போது தகவல் வெளியாகி உள்ளன. இரண்டு நாட்கள் கொண்டதாக இருக்கும் பிரதமரின் சுற்றுப்பயணம் எந்த தேதிகளில் இருக்கும் என இன்னும் இறுதி செய்யப்படவில்லை.   


செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிரதமரின் அமெரிக்க பயணம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் வாஷிங்டன் மற்றும் நியூயார்க் நகரங்களுக்கு அவர் செல்ல இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. பயணத்தின் மிக முக்கிய அம்சமாக இருக்கப்போவது அதிபர் ஜோ பைடன் உடனான சந்திப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இருவரின் பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் முக்கியமாக இடம்பெறக்கூடும். இரண்டாவது முக்கிய அம்சமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையிலும் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். நியூயார்கில் உள்ள தலைமையகத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் 76வது ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. 


இச்சபையில் செப்டம்பர் 21ம் தேதி உயர்மட்ட அளவிலான விவாதம் இருக்கலாம் என கூறப்படுகிறது. மூன்றாவதாக வாஷிங்டனில் நடைபெறும் குவாட் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள இருக்கிறார். அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் எனும் அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் மாநாடு இதுவரை நேரடியாக நடைபெற்றதில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் மெய்நிகர் முறையில் நடைபெற்றது. இந்த காரணத்தினால், பிரதமரின் பயணம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பது தற்போது வரை உறுதியாகவில்லை. 

Input:https://www.news18.com/news/politics/pm-modi-to-meet-joe-biden-during-us-visit-this-month-heres-whats-on-the-agenda-4171040.html

Image courtesy:News18 


Tags:    

Similar News