கேரள மாநிலம், குளநாடா கிராமத்தில் வசித்து வரும் சிறுமி ஜெயலட்சுமிக்கு இயற்க்கை மீது அளவு கடந்த பற்று இருந்துள்ளது. இதனால் இயற்கை விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த எண்ணிய அவர் தான் வளர்த்த கொய்யா செடி ஒன்றை பிரதமர் மோடிக்கு பரிசாக தர முடிவு செய்தார். அதன் படி நடிகர் சுரேஷ் கோபியிடம் அந்த செடியை கொடுத்து பிரதமரிடம் சேர்த்துவிட சொல்லி இருக்கிறார்.
இந்த செடியை நடிகர் சுரேஷ் கோபி கவனமுடன் எடுத்து சென்று பிரதமரிடம் சேர்த்துள்ளார்.இதனை பெற்று கொண்ட பிரதமர் தன் இல்லத்தில் அந்த செடியை வளர்க்க போவதாகவும் உறுதியளித்துள்ளதாக சுரேஷ் கோபி தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியுள்ளார். சிறுமியின் சின்ன செடி பிரதமர் இல்லத்தில் மரமாக போவதை எண்ணி நெட்டிசன்கள் சிலாகித்து வருகின்றனர்.