ராமர் பற்றிய சர்ச்சை கருத்து - பேராசிரியை மீது பஞ்சாப் அரசு நடவடிக்கை!

Update: 2022-04-26 12:12 GMT

பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் அமைந்துள்ள லவ்லி ப்ரோபஸ்னல் பல்கலைக்கழகத்தில் பெண் பேராசிரியர் ஒருவர் ராமர் கெட்டவர் என்றும், ராவணன் நல்லவர் என்ற சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார்.

லவ்லி ப்ரோபஸ்னல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பெண் பேராசிரியை குர்சங்க ப்ரீத் கவுர். இவர் பாடம் எடுத்துக்கொண்டிருந்த போது ராமர் கெட்டவர் என்று கூறினார். அதே சமயம் ராவணன் மிகவும் நல்லவர் என்று விமர்சனம் செய்தார். அது மட்டுமின்றி ராமரை மோசமாக விமர்சனம் செய்தார். இந்த வீடியோவை அங்கிருந்த மாணவர்கள் செல்போனில் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனால் சர்ச்சையான கருத்து பதிவிட்டு பேராசிரியைக்கு கண்டனங்கள் எழுந்துள்ளது. அவரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை பஞ்சாப் அரசுக்கு வைத்தனர். இதன் எதிரொலியாக பல்கலைக்கழகம் பேராசிரியை பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.

இது பற்றி அந்த பேராசிரியை வெளியிட்டுள்ள வீடியோவில், ராவணன் மிகவும் நல்லவர். ராமர் மிகவும் தந்திரத்தை கையாண்டு வருபவர்கள். இவர் சீதையை கவருவதற்காகவே இப்படி நாடமாடினார். சீதை துன்பத்திற்கு தள்ளிய ராமர் அனைத்து பழிகளையும் ராவணன் மீது போட்டுவிட்டார். தற்போது இருவரில் யாரு நல்லவர், கெட்டவர் என்ற ஒப்பிட்டை செய்ய முடியும். ஒட்டுமொத்த உலகம் ராமரை வழிபடுகிறது. ராவணன் தீயவனாக சித்தரித்துள்ளது. ஆனால் அனைத்து திட்டங்களையும் தீட்டியவர் ராமர் எனவே இவர் எப்படி நல்லவராக இருக்க முடியும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: Wikipedia

Tags:    

Similar News