டெல்லி எல்லையில் போராட்டத்தில் கலந்துகொள்ளாத குடும்பங்களுக்கு அபராதம் விதிக்கும் பஞ்சாப் கிராமம்.!

டெல்லி எல்லையில் போராட்டத்தில் கலந்துகொள்ளாத குடும்பங்களுக்கு அபராதம் விதிக்கும் பஞ்சாப் கிராமம்.!

Update: 2021-01-30 14:27 GMT

தற்போது குடியரசு தினத்தில் விவசாயச் சங்கங்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து அது தொடர்பாகப் பல நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும் வேளையில், தற்போது பஞ்சாபில் பதிந்தா கிராம பஞ்சாயத்தில் ஒரு குழப்பம் கிளம்பியுள்ளது.

கிராம பஞ்சாயத்தின் தலைவர் மஞ்சித் கவுர், தற்போது டெல்லி எல்லையில் நடந்து வரும் போராட்டத்தில் கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலிருந்து ஒரு நபர் வாரத்தில் போராட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். 

மேலும் தனது கட்டளைக்கு மக்களை அழுத்தத்தில் கொண்டுவரவும் அபராதத்தையும் விதித்துள்ளனர். விதிக்கப்பட்ட கட்டளையை மீறுபவர்களுக்கு 1,500 அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளனர் மற்றும் அதனைச் செலுத்த தவறியவர்கள் புறக்கணிக்கப்படுவர் என்றும் கூறியுள்ளனர். 

முன்னர் சிங்கு எல்லையில் போராட்டக்காரர்களுக்கும் மற்றும் உள்ளூர் வாசிகளுக்கும் இடையே மோதல் கிளம்பியது. உள்ளூர் வாசிகள் போராட்டக்காரர்கள் அந்த இடத்தை விட்டுச் செல்லுமாறு கோரிக்கை விடுத்தனர். போராட்டக்காரர்கள் உள்ளூர் வாசிகள் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர் மற்றும் இதனால் காவல்துறை பலரும் காயமடைந்தனர். 
மேலும் தற்போது நடந்து வரும் போராட்டத்தில் பல குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றது. குடியரசு தின வன்முறைக்குப் பிறகு பாரதீய கிசான் யூனியன் போராட்டத்தைக் கைவிடப் போவதாகக் கூறியதை அடுத்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனர். BKU தலைவர் தாகூர் ஷியோராஜ் சிங் பாடி போராட்டத்தில் கலந்துகொள்ளத் தனது சங்க உறுப்பினர்களுக்கு வீடியோ மூலம் செய்தி அனுப்பியுள்ளார். மேலும் இந்த கலவர போராட்டத்திற்குப் பல அரசியல் கட்சிகளும் கலந்து கொண்டுள்ளனர். 

Similar News