ராகுல் காந்தியிடம் இருந்து பறிக்கப்பட்ட எம்.பி பதவி? காங்கிரஸின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
ராகுல் காந்தி இரண்டு ஆண்டு சிறை தண்டனை பெற்று இருப்பதால் அவரிடமிருந்து எம்.பி பதவியை பறிக்க வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.
ராகுல் காந்தி தற்பொழுது தன்னுடைய கடந்த கால பொதுக்கூட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி மீது அவதூறான குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார். இதன் காரணமாக அவருடைய வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது. அந்த வகையில் இந்த வழக்கிற்கு தற்போது தீர்ப்பு கிடைத்து இருக்கிறது. குறிப்பாக இதில் இரண்டு ஆண்டு சிறைதண்டனையும் ராகுல் காந்திக்கு விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
எனவே இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றிருப்பதால் அவரிடமிருந்து காங்கிரஸ் எம்.பி பதவியை பறிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் வக்கீல் சபாநாயகர் ஓம் பீர்லாவிடம் மனு கொடுத்து இருக்கிறார். குறிப்பாக அந்த மனுவில் கூறுகையில், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 8(3) படி தீர்ப்பு வழங்கிய நாளிலிருந்து தகுதி நீக்கம் செய்ய முடியும். எனவே இந்த சட்ட பிரிவின்படி, ராகுல் காந்தியை தற்பொழுது எம். பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர் சபாநாயகருக்கு அளித்த மனுவில் கூறப்பட்டிருக்கிறது.
கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டவர் ராகுல் காந்தி. அதே போல், உ.பியில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த நிர்வாகி ஆசாம் கான் என்பவரது மகன் சிறை தண்டனை பெற்றதும் அவருடைய எம்.எல்.ஏ பதவி பறிபோனது. தற்போது எம்.பி பதவியை தக்க வைக்க வழி ஏதாவது இருக்கிறதா? என்று கலந்து ஆலோசிக்க காங்கிரஸ் தலைவர் மூத்த நிர்வாகிகளுடன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Dinamalar