ராகுல் காந்தி பார்த்து பா.ஜ.க அஞ்சுகிறதா? நச்சுனு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர்!

ராகுல் காந்தியை பார்த்து பா.ஜ.க அஞ்சுகிறது என்று இந்திய காங்கிரஸ் பொது செயலாளர் பேட்டி அளித்து இருக்கிறார்.

Update: 2023-04-02 01:53 GMT

ராகுல் காந்தியை பார்த்து பா.ஜ.க அஞ்சுகிறது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முகில் கருத்து தெரிவித்து இருக்கிறார். இவருடைய கருத்திற்கு எதிராக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக அவர் கூறுகையில், அவசர நிலை மூலம் காங்கிரஸ் தான் தற்போது ஜனநாயகத்தை கொலை செய்கிறது. வெளிநாட்டில் அழுது புலம்பி உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுமாறு கூறவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். குறிப்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான தீர்ப்பையும், தற்பொழுது எம்.பி பதவி பதிப்பையும் கவனத்தில் கொண்டு பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.


அந்த வகையில் ஜெர்மனி வெளியுறுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் இதுபற்றி கருத்து தெரிவித்திருக்கிறார். அவருடைய கருத்தை வரவேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் நன்றி தெரிவிக்கும் விதமாக பேசுகிறார். இந்நிலையில் மத்திய அமைச்சர் ராகுல் காந்திக்கு எதிராக புதிய ஒரு தாக்குதலை தனது பேச்சின் மூலம் கொடுத்து இருக்கிறார். அவசரநிலை சட்டம் கொண்டு வந்த பொழுது தான் இந்தியாவின் ஜனநாயகத்தை காங்கிரஸ் உண்மையிலேயே கொலை செய்தது.


அப்போது யாரும் வெளிநாட்டில் அழுது புலம்பி இந்திய நாட்டின் உள்விவாரகாரங்களில் தலையிடுமாறு கேட்டது கூட கிடையாது. இந்தியர்களே போராடி ஜனநாயகத்தை நிலை நாட்டுகிறார்கள், ஏனெனில் அவர்கள் ஆன்மாவிலும், மனதிலும் ஜனநாயகம் உயிர் வாழ்கிறது என்ற ஒரு நம்பிக்கை இருந்ததாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார் ஆனால் அவசர நிலை மூலம் ஜனநாயகத்தை காங்கிரஸ்தான் கொலை செய்து இருக்கிறது என்றும் அவர் விமர்சனம் செய்து இருக்கிறார்.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News