எம்.பி செய்யும் வேலையா இது? வெளியுறவுத்துறை அனுமதி பெறாமல் ராகுல் காந்தி வெளிநாடு பயணம்!
வெளியுறவுத்துறையின் அனுமதி பெறாமல் ராகுல் காந்தி லண்டன் பயணம் செய்தது குறித்து, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
வெளிநாடு செல்லும் எம்.பி.க்கள், வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் எழுத்துப்பூர்வமான அனுமதி பெறவேண்டும் என்றும், அந்த அனுமதி 3 வாரங்களுக்கு முன்னதாக பெறப்பட வேண்டும் என்றும் நடைமுறை வழக்கம் உள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகள் மற்றும் அமைப்புகள் நடத்தும் நிகழ்வுகளில் பங்கேற்க, பெரும்பாலும், வெளியுறவுத்துறை அமைச்சகம் வாயிலாகவே எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. அப்படி அல்லாமல், எம்.பி.க்கள் நேரடியாக அழைக்கப்படும் போது, மத்திய அரசிடம் இருந்து அரசியல் ரீதியான அனுமதி பெறுவது கட்டாயம் ஆகும்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு அண்மையில் சென்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்தப் பயணத்திற்கு, வெளியுறவுத்துறையின் அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
Input From: India Today