ரயில்வே முன்பதிவு கட்டணங்கள்.. திரும்ப பெறுவதற்கு 3 மாதங்கள் அவகாசம் நீட்டிப்பு.!

ரயில்வே முன்பதிவு கட்டணங்கள்.. திரும்ப பெறுவதற்கு 3 மாதங்கள் அவகாசம் நீட்டிப்பு.!

Update: 2021-01-09 15:43 GMT

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் ஜூலை வரை ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால் முன்பதிவு செய்த பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் கட்டணத்தொகையை அளித்து வருகிறது.

அதில் இன்னும் பல ஆயிரம் பேர் பணத்தை திரும்பபெற முடியாமல் தவித்து வருவதாக ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை வந்தது. இதனையடுத்து ரயில்வே நிர்வாகம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

கட்டண பணத்தை திரும்ப பெறுவதற்கான விண்ணப்பத்துடன் ரயில்வேயால் அளிக்கப்பட்ட அசல் டிக்கெட்டையும் அளிக்க வேண்டும். இதனையடுத்து டிக்கெட் கட்டணம் எவ்வித பிடித்தமுமின்றி முழுமையாக திரும்ப அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

Similar News